ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஹராரேவில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஜிம்பாப்வே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரகானே (63), முரளி விஜய் (72), ராயுடு (41) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. தொடக்க வீரர் சிபாபா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் வந்த வீரர்கள் விரைவிலேயே பெவிலியன் திரும்பினார்கள்.
சிபான்டா 2, மசகட்சா 5, சிகும்புரா 9, வில்லியம்ஸ் 20, சிகன்தர் ரசா 18 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த முடும்பாமி சிபாபாவுடன் ஜோடி சேர்ந்து ரன் உயர காரணமாக இருந்தார். அரை சதம் கடந்த சிபாபா 72 ரன்னில் அவுட் ஆக, முடும்பாமி 32 ரன்னில் அவுட் ஆனார்.
அதன்பின் உள்ள விக்கெட்டை இந்திய பந்த வீச்சாளர்கள் வீழ்த்த ஜிம்பாப்வே அணி 49 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 கைப்பற்றியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்..











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !