Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

உங்கள் கையடக்க தொலைபேசியில் எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய் து 40404 க்கு அனுப்புங்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இடமாற்றம்

Written By We Are Anonymous on Saturday, July 25, 2015 | Saturday, July 25, 2015





தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சமிந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் வினவியபோது, சேவைக்கான தேவையை கருத்திற்கொண்டு அமைச்சின் செயலாளரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவினோம்.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒருவர் இல்லாமையால் அந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கியதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை சவலக்கடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக தேர்தல் போஸ்டர் ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சியொன்றின் 10 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போஸ்டர்கள் மற்றும் வாகனம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக சவலக்கடை பொலிஸார் குறிப்பிட்டனர்.
Share this article :




முக்கிய குறிப்பு: அவதானி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு அவதானி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Avathanimedia@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Avathani Unicode

Bcas Campas

✔✔ A/L Result ✔✔

✔✔ Web Desgin ✔✔

Total Pageviews

 

உங்கள் கையடக்க தொலைபேசியில்எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய்து 40404 க்கு அனுப்புங்கள்

Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Copyright © 2015-2016 Sri Lanka First and Fast Tamil News | Avathani 24x7. All rights Reserved. Design by Mohamed Hasni