Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

உங்கள் கையடக்க தொலைபேசியில் எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய் து 40404 க்கு அனுப்புங்கள்

இலங்கை-மேற்கிந்திய அணிகள் இளம் வீரர்களுடன் களத்தில் குதிப்பு

Written By We Are Anonymous on Thursday, October 8, 2015 | Thursday, October 08, 2015






சோபர்ஸ் - திஸேர கிண்ண டெஸ்ட் தொடர்:


இலங்கை - மேற்கிந்திய தீவு இரு அணிகளும் இளம் வீரர்களைக் கொண்டு எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதால் இரு அணிகளும் வெற்றிவாகை சூடுவதில் முனைப்புடன் களத்தில் குதிக்கின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின்றது.


இச்சுற்றுப்போட்டிக்கு சோபர்ஸ்-திஸேரா கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ளது. இருவரும் இரண்டு நாடுகளின் பிரபல்யம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இரு அணிகளும் மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் விளையாடவுள்ளமை குறிப் பிடத்தக்கது.


மேற்கிந்திய அணி 2012 ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மண்ணில் கிரிக்கெட் போட்டியில் ஆட வுள்ளது. இலங்கை அணியைப் பொறுத்தவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகளுடன் தோல்விக்கு பின்னர் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் மேற் கிந்திய அணியுடன் மோதவுள்ளது.


இரு அணிகளும் இளம் வீரர்களைக் கொண்டு களமிறங்குகிறது.


இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:


எங்களது அணி டெஸ்ட் போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் அதேநேரம் ஒரு நாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளை வெல்வதற்கான அனைத்துப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கை அணி முதலில் டெஸ்ட் போட்டி களை வெல்வதற்கான முனைப்புடன் முத லில் களமிறங்கும் காரணம் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் ஏற்பட்ட தோல் வியை இந்த தொடரில் சரி செய்து விளை யாட எமது அணி தயார் நிலையில் உள் ளது. எமது அணியும் ஓரளவுக்கு இளம் அணியை கொண்ட அணி என்பது குறிப் பிடத்தக்கது.


நாங்கள் மேற்கிந்திய அணியை குறை த்து மதிப்பிட முடியாது அவர்களும் எதிர ணிக்கு சவால் விடும் விதத்தில் ஆடுவார் கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதேவேளை எங்களது முன்னாள் வீர ரின் பெயரில் இந்த தொடர் இடம்பெறு வதால் அதனை நாங்கள் எங்கள் நாட்டு க்கு இந்தக் கிண்ணத்தை கொண்டு செல்ல தயாராகவுள்ளோம் என்றும் அவர் குறிப் பிட்டார்.


இலங்கை கால நிலை எங்களுக்கு ஒத் துழைத்தால் நாங்கள் மூன்று நாள் பயிற் சிப்போட்டியில் திறமையை வெளிக்காட்டி டெஸ்ட் போட்டியில் வெல்ல காத்திருக் கின்றோம் என மேற்கந்திய அணியின் புதிய இளம் தலைவர் Nஜசன் ஹோல்டர் தெரி வித்தார்.


இதேவேளை இலங்கை அணி கடந்த காலங் களில் விட்ட தவறுகளை இனம் கண்டு நாங்கள் அதாவது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் விட்ட தவறுகளை நாங்கள் இனம் கண்டு அத ற்கு ஏற்றாற் போல் எமது அணி இந்த தொடரில் ஆடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதேவேளை மேற்கிந்திய அணி நிரந்தர பயிற் சியாளர் இல்லாமல் இம்முறை இடைக்கால பயிற் சியாளருடன் இலங்கை வந்துள்ளது. இப்போட்டி க்கு ஜட், மற்றும் ஹீரோ ஹொண்டா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக் கது. கிரிக்கெட் போட்டி தொடர்பான செய்தியா ளர் மாநாடு நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.


இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் பிரகாஷ் சாப்டர் தலைமையில் இடம்பெற்றது.


இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறுகிறது.


ஏ.ஆர்.பரீத்
Share this article :




முக்கிய குறிப்பு: அவதானி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு அவதானி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Avathanimedia@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Avathani Unicode

Bcas Campas

✔✔ A/L Result ✔✔

✔✔ Web Desgin ✔✔

Total Pageviews

 

உங்கள் கையடக்க தொலைபேசியில்எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய்து 40404 க்கு அனுப்புங்கள்

Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Copyright © 2015-2016 Sri Lanka First and Fast Tamil News | Avathani 24x7. All rights Reserved. Design by Mohamed Hasni